- Get link
- X
- Other Apps
காட்சி 9
எழுபத்து இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு நடந்தவற்றை விலாவரியாக, ஓம் கணேஷ் நகர் 4th cross street இல் இருக்கும் சிறுவர் பூங்காவில் உள்ள desk இல் அமர்ந்தவாறு, Franklin இடம் கூறிக் கொண்டு இருந்தாள் இயற்கைப்பண். Franklin இயற்கைப்பண்ணின் பாலிய சினேகிதன். Franklin னிர்கும் இயற்கைப்பண்ணிற்கும் ஒரே பிறந்ததினம் தான். சிறுவயதில் இயற்கைப்பண்ணின் பக்கத்து வீட்டில் தான் franklin னின் குடும்பம் இருந்தது. சொந்த பந்தம் போல அப்படி ஒரு நெருக்கம்.
அவ்வாறு நடந்தவற்றைக் கூறிக் கொண்டு இருக்கையில், இயற்கைப்பண்ணிற்கு ஒரு யோசனை தட்டியது. இந்த விஷயத்தை செந்தேனிடம் கூறியவாறே குரலமுதுவிடமும் கூறி, அவள் இதற்கு எவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று பார்க்க ஆர்வம் துளிர்த்தது.
பாதி கதையைக் கூறிவிட்டு, “டேய், எனக்கு இன்னொரு idea வந்துருக்கு, நான் மீதி கதையை நாளைக்குச் சொல்றேன்” என்று, அங்கு இருந்து கிளம்பினாள் இயற்கைப்பண். “ஏய் ஏய் இரு மா தாயே, என்ன idea னு சொல்லீட்டு போ” என்று கூறிய franklin ஐ கண்டுகொள்ளாமல் முன்னே நடந்து கொண்டிருந்தாள். “எல்லா நமக்கு னு வந்து சேருதுக பாரு” என்று சிரித்துக்கொண்டே பேனாவின் பின்புறம் மாட்டி இருந்த மூடியினால் நெற்றியில் இடித்துக்கொண்டு, “ஏய் இயற்கைப்பண், அம்மாவைக் கேட்டேன்னு சொல்லு” என்றான். “உன்ன, போன மாசத்துல இருந்து சாப்பிட வர சொல்ராங்க”. "என்ட நீ சொல்ல வேண்டியதுதான லூசு?" சிரித்தவாறே கிண்டலுடன் "இதுக்குதான் இதுக்குதான் whatsapp ல எழில் ஓட chat அ மட்டு open பண்ணாம எல்லாரோடதையும் அப்போ அப்போ open பண்ணணுங்கிறது, என் chat அ பாரு பார்த்துட்டு வந்து சேறு".
“ஏ எங்க இருக்கு? நீ எங்க அனுப்பீர்க?...” “எரும... அனுப்பி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு search பண்ணி தொல” “அட ஆமா... பைத்தியம் அனுப்பீர்க்கு!” என்று சிரித்தான். “ம்... சிரிச்சுக்கோ... சரி நா கிளம்புறேன் bye”. “நானும் கிளம்ப வேண்டியது தான், நான் மட்டு இங்க உக்காந்துட்டு என்ன பண்றது...” “சரி எனக்கு idea மறக்கறதுக்குள்ள வந்து தொல” என்று விறுவிறுவென நடந்தாள். அவளின் அவசர நடையை பார்த்து ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு’ என்ற பாடலை பாடி கிண்டல் செய்தான். இருவருக்கும் சிரிப்பு அடக்க முடியவில்லை... சிரித்து முடித்தவுடன் Franklin ஐ பார்த்து “ஓட்ரியா என்ன இரு இரு மீதி கதைய சொல்லவே மாட்டேன் பாரு” என்று கூறி கொக்கானி காட்டினாள். “Yeh please please please எனக்கு தலை வெடிச்சுரும் லூசு”. "அந்த பயம் இருக்கட்டும்” இருவரின் பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் park ஐ தான்டி சென்றும், கேட்டுக்கொண்டே இருந்தது.
Whatsapp பை எடுத்து, குரலமுதுவின் chat டிருக்கு சென்று செந்தேனிடம் ஆரம்பத்தில் கூறும் பொழுது எந்த எந்த பதங்களைப் பயன் படுத்தி, எந்த தோரணையில் நடந்த விஷயத்தை உரைத்தாலோ, அதே போல அச்சு அசலாக குரலமுதுவிடமும் விஷயத்தை சொல்லிவிட்டு “குரலமுதுவும் செந்தேன் மாதிரி இந்த விஷயத்த எடுத்துக்க கூடாது ஆண்டவா” என்று தனக்குள் கூறிக்கொண்டாள். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. குரலமுதும் செந்தேன் போலவேதான் இந்த விஷயத்தை நோக்கினாள். சில வித்தியாசங்கள் மட்டுமே இருந்தன.
செந்தேன், இறுதியில் உண்மையை உன் அம்மாவிடம் கூறாதே என்றாள். ஆனால் குரலமுதுவோ இதை நீ உன் அம்மாவிடம் கூறித்தான் ஆகவேனும் என்றாள். செந்தேன், இரண்டே குரல் பதிவுகளில் கூற வேண்டியவற்றை சட்டென்று கூறிவிட்டாள். ஆனால் குரலமுதுவோ ஒரு ஐந்து ஆறு குரல் பதிவுகளில் பல எடுத்துக்காட்டுகளை கூறி, அவள் பெயரை உபயோகித்து இருக்க கூடாது என்பதை சொல்ல முயன்றாள். முக்கியமாக இருவரும் கூறியது என்னவென்றால் ... “உங்க அம்மாவை பார்த்தால், நான் எவ்வாறு எதிர் கொள்வேன், என் முகத்தை எங்கு வைத்து கொள்வேன்” என்பதே .
குரலமுது கூறி முடித்ததும் “நான் பொய் கூறினேன், உன் பெயரை நான் உபயோகிக்கவில்லை. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்தால், நீ என்ன செய்வாய் என்று பார்த்தேன்” என்றாள் இயற்கைப்பண். அதற்கு குரலமுதுவோ “ஒருவேளை நீ இனிமேல் உபயோகித்துக் கொள்ளலாமா என்று கேட்கின்றாயோ” என்றாள். “இல்லை இல்லை அப்படியெல்லாம் இல்லை, இது கடந்தகால சம்பவம் தான், வருங்கால சம்பவம் இல்லை” என்றாள்.
“ஐயோ நிஜமாவே இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. ஐயோ என்னடா என்னை சொல்லீட்டாலேனு ஒரு மாதிரி இருந்துச்சு”.
பின்பு, குரலமுது யார் அந்த பெண், யார் அந்த கடன் வாங்கிய ஆண் என்பதை எல்லாம் கேட்டு தெரிந்துகொண்டாள். குரலமுது, செந்தேன், இயற்கைப்பண், தேசியக்கொடி அனைவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து இருந்ததால், அனைத்து கதா பாத்திரங்களும் குரலமுதுவிற்கு தெரிந்ததாகவே இருந்தது. முன்பே, தேசியக்கொடி கடன் கேட்ட பொழுது குரலமுதுவிடமும் இயற்கைப்பண் கேட்டு இருந்ததால், தேசியக்கொடிதான் அந்த பையன் என்பதை அவள் யூகித்துவிட்டாள். அனைத்தையும் இயற்கைப்பண் கூறிவிட்டு, “இப்போ நீயும் சரி, செந்தேனும் சரி, எனக்கு உங்க மேல எந்த உரிமையும் இல்லனு சொல்லீட்டிங்க. ஒரு மாரி friendship போன மாதிரி ஒரு feeling” என்றாள். பல advice மற்றும் தத்துவங்களுக்கு பிறகு, “நீ எப்படி எங்கள விட்டு குடுத்த, நீ எப்படி எங்க பேர use பண்ண? நீ என்ன பண்ணீர்க்கனும் தெரியுமா, தூரத்துல யார்னே தெரியாத ஒரு friend ஓட பெயர உங்க அம்மாகிட்ட சொல்லீர்கனும், அப்படி பண்ணீர்ந்தா அந்த தூரத்துல இருக்க friend அ உங்க அம்மா தப்பா நினைச்சாலும் தப்பில்ல. அத விட்டுட்டு நீ எப்படி எங்கள விட்டுகுடுத்த” என்றாள் குரலமுது. “ஏ லூசா நீ, யாரோ பேர் தெரியாத பொண்ணுக்கு காசு குடுப்பாங்களா? அதுவும் இல்லாம, உங்கள விட்டுக்குடுத்தேனு சொல்ற, தேசியக்கொடிக்கு correct time ல குடுக்க முடியாம போகுனு நான் என்ன கனவா கண்டேன்” என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டாள். இவள் இனிமேல் சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் இயற்கைப்பண். ஆனால், குரலமுதுவின் பதில் மனத்தை மேலும் காயப்படுத்தியது.
இரு நெருங்கிய தோழிகளும், "உனக்கு என் பெயரை உபயோகிக்க உரிமை இல்லை" என்று சொல்லாமல் சொல்லிவிட்டதை நினைத்தால், நெஞ்சம் பதைபதைத்து. இருவரிடமும் உரிமை போனதனால் நட்பே போனதுபோல் ஒரு பிம்பம் நெஞ்சில் துளிர்த்தது.
உரிமை தானே உறவின் உயிர் நாடி, உரிமையை இழந்த எந்த உறவும் , மெய்யான உயிர் உறவு அல்ல, ஒருவித பாசாங்கே. எல்லை இல்லாதது நட்பு, குறிப்பாக மிகவும் நெருக்கமான உயிர் நட்பு; என்று இதுவரை நினைத்துக்கொண்டு இருந்த இயற்கைப்பண்ணிற்கு, செருப்பை அவிழ்த்து முகத்தில் அடித்தது போல, நட்பிற்கும் எல்லை உண்டு என்ற உண்மையைப் புலப்படுத்தினர் அவளின் தோழிகள் .
Comments
Post a Comment