குளத்தினுள்ளே இருந்திருக்கலாம் இந்த தொட்டியில் என் குடும்பத்தினர் எவரையும் காணவில்லை... தேடித்தேடி செதில்கள் தேய்ந்து விட்டன... என புலம்பியது... மீன்!
பஞ்சாகவே இருந்திருக்கலாம் காற்றில் இஷ்டத்திற்கு பறந்து கொண்டிருந்தேன்... துணியானவுடன் துண்டு துண்டாகி பின் ஒன்று சேர்கிறேன்... என அலறியது தையல் இயந்திரத்தில் இருந்து... ஆடை!
பரிணமிக்காமலே இருந்திருக்கலாம்... கார்த்திகை குழம்பாய் ஆங்கிலத்துடன் என்னை கலக்கின்றனர்... என கோபம் அடைந்தது... தமிழ்!
மரமாகவே இருந்திருக்கலாம்... தினமும் நூறு உயிரின் தலையும் உடலும் என் மீது துண்டாவதை ஏற்க முடியவில்லை... என எரிச்சல் அடைந்தது கசாப்பு கடையிலிருந்த... கட்டை!
சாலை ஓர கடையில் உல்லாசமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருந்தால் கூட நாலு பேர் வாங்கி சென்று இருப்பார்கள்... இந்த ஏசிக்கு நேராக வெகு நாளாக உட்கார வெறுப்பாய் உள்ளது... ஒரு குல்லா கூட இல்லை... என கூச்சலிட்டது மாலில் இருந்த... பொம்மை!
மூங்கில் ஆகவே இருந்திருக்கலாம் என்னுள் துளையிட்ட உடன் ஊத தெரியாத பலரும் ஊதி என் செவிகள் கிழிகின்றன... என கதறியது... புல்லாங்குழல்!
கருவறையிலேயே இருந்திருக்கலாம்... எட்டி உதைத்ததை கொண்டாடியவர்கள் எதை செய்தாலும் கடிந்து கொள்கிறார்கள்... என முகம் திருப்பினாள்... சுட்டி!
செம்மனாகவே இருந்திருக்கலாம்... இவர்கள் பேசும் கிசுகிசுவை எல்லாம் கேட்டு தொலைய வேண்டி உள்ளது... என சலித்துக் கொண்டது... சுவரின் செங்கல்!
அன்பை வெளிப்படுத்தாமலே இருந்திருக்கலாம் கடைசி வரை உறவை காப்பாற்றியாவது இருந்திருக்கலாம்... என மண்டியிட்டது... மனதின் குரல்!
கடந்தகாலம் வண்ணத்துடன் வசந்தமாய் வலம் வந்தாலும்... வசம் இருப்பதை ரசித்து ரசித்து வாழ, இப்புத்தாண்டே புத்தம் புதிய வானவில்லாய் தோன்றி மனம் மகிழவைக்கும்!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
- குருஷியா
Special thanks to: திரு அழகுவேலன்.
உங்களது தமிழ் கவிதைக்கு நான் ஒரு அடிமை
ReplyDelete:)
Delete❤️✨
ReplyDeleteThanks for the support ib :)
Delete