நேர்படப் பேசு

 என் அருமை சகோவே!

பாம்பின் கால் பாம்பே அறியாது,

வண்டு பறக்காதது என அதற்கே தெரியாது,

விழி இமைக்கவிருப்பதை இமையே அறியாது,

ஆதியில் உன்னை தாழ்ச்சிக்குலத்தவன் என கூறுவது உன் மனமே என உனக்கே தெரியாது.

பேச்சுரிமை எனும் வித்தை மரமாக்கு,

வரலாறு பேசு, வரவிருப்பதை பேசு,

பெண்ணியம் பேசு, பெரும் பாடங்களை பேசு,

அன்பை பேசு, பண்பை பேசு,

அறியாததை அனைவரும் அறிய பேசு,

அந்த சிறு தாழ்வுமனத்துளியை நீயே வெல்லும் வரை பேசு பேசு நேர்படப்பேசு!


குருஷியா

Special Thanks to: Gowtham N

Comments

  1. பேச்சின் மகத்துவத்தை எழுத்தால் உரைத்ததற்கு நன்றிகள்..

    ReplyDelete

Post a Comment