அரிதான அதிரரே ஆதிரரே!

இத்தனை நேர்த்தியின் சுரங்கம் எதுவென ஆய்ந்திட வேண்டும்.

தினசரி அட்டவணைதனை எட்டிப்பார்த்து, குறிப்புகளும் வரைந்திட வேண்டும்.

அரிவாள் அறிவும், அரியதொரு அழகான அகமும், செழித்து செம்மையுர, வீட்டுக் கொள்ளைதனில் மேம்பாட்டுக் கூடங்கள் அமைத்தீரோ?

செயற்கை நுண்ணறிவில் அரிமா என விளங்க, உறக்கத்திடம் பொழுதையும் உரிமையோடு  இரவல் கேட்டீரோ?

முடிவிலா நற்குணமும், முடிவிலி நுண்ணறிவும்,  முடியாத எளிமையும் உங்களை பிறரிடமிருந்து வேறு படுத்தும். 

புனிதமான பண்புகள், ராஜராஜரின் கோபுரம் போல வியக்க வைத்து, ரசிகர் மனத்தை வேரோடு கடத்தும்.

எனது வாழ்நாளுள் முப்பது ஆண்டை கழித்து, அதை மார்கண்டேயனாய் நீங்கள் கழிக்க வரமளிக்குமாறு கடவுளிடம் மன்றாடிட தோன்றும்.

தீர உழைப்பாளி, சீரான செயலாளி, வீர வழிகாட்டி என பட்டங்கள் வழங்கி, உங்களை கோப்பையும் கையுமாய் பார்த்து மனம் மகிழ்ந்திட வேண்டும்

பவளப்பாறை போல உங்களையும் பொக்கிஷமாய் பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் பக்குவமாய் ஒப்படைத்திட வேண்டும்.

மனம்கவர் கோபுரம், தன்னை குடையுடன் ஒப்பிடல் நியாயமா?

இரண்டுமே, மாரியும் பரிதியும் உட்புகாது காத்தாலும் ஒன்றாகிவிடுமா?

குடையோ குடையை உருவாக்கும் வித்தையை கற்றுத்தராது... தன் கம்பிகளின் கூர்மையை எண்ணி பெருமை பட்டுக்கொள்ளும்.

கோபுரமோ, அதனை போலவே இன்னொன்றை உருவாக்கும் வித்தையை கல்வெட்டாய் மனத்தில் பதித்தல்லவா விடுகிறது!

கரும்புபோல கவலைமாற, முகில்போல மனம்மாற, புத்தாடைபோல தினம்மாற, கணக்கின்றி கன்னத்தில் குழிவிழ, நல்லதொரு நாழிகையில் திருமணமொன்று நிகழ,  அர்ச்சதை தூவி மனம்நெகிழ ஆவலோடு காத்திருக்கிறோம்!

குருஷியா

Special thanks to: Gowtham N

Comments