- Get link
- X
- Other Apps
காட்சி 5
மூன்று நாட்களுக்கு பிறகு, காலையில் ஒரு ஏழு மணி அளவில் காக்கைக்கும் அணிலுக்கும் வடித்த சாதமும், புறாவிற்கும் மயிலுக்கும் அரிசியும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள் இயற்கைப்பண். சாமி அறையில் பயன்படுத்தும் பித்தளை பாத்திரங்களை விளக்கி கொண்டு இருந்தாள் வீரவினை. “அம்மா இங்க தான் இருக்கீங்களா, நான் வீட்ல தேடீட்டு இருந்தேன்”. “ம்... இங்க தான் இருக்கேன்”. “சரி இருங்க நானும் help பண்றேன்”. “அதுக்கு முன்னாடி குருவிக்கு எல்லாம் தண்ணி வை. அரிசியும் சாப்பாடயும் விட தண்ணி தான் ரொம்ப முக்கியம்”. “Okay வெச்சுறேன்”... என்று இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இயற்கைப்பண் அவளுக்கு வந்த கனவினை கூறி முடித்தவுடன், “எனக்கு இன்னைக்கு காலையில ஒரு surprise நடந்துச்சு தெரியுமா” என்றாள் வீரவினை. “அப்டியா, என்ன மா அது, எனக்கு தெரியாம!?”, “உனக்கு விஜயா ஞாபகம் இருக்கா?”... “ஓ! நல்லா ஞாபகம் இருக்கே, அஞ்சாயிரத்துக்கு துணிய தைச்சுட்டு, காசு குடுக்காம ஏமாத்துனாங்களே அந்த விஜயா தான”... “அதே அதே. இன்னைக்கு காலையில net on பண்னேன். 5000 credited to your account னு வந்துச்சு. அப்ரோ பாத்தா whatsapp ல விஜயா voice message பண்ணீர்ந்தா. அவளும் பல கஷ்டம் பட்டு இருப்பா போல”. ஆச்சிரியத்துடன் “நிஜமாவா மா, எப்படி மா ரெண்டு வர்ஷம் கழிச்சு?” என்று அதிர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்து கேட்டாள். “நிஜமா தான்... அதுனால நான் இப்போ என்ன சொல்ல வரேன் னா... செந்தேன் கிட்ட கொஞ்ச நிதானமாவே குடுக்க சொல்லு. lockdown ல அவங்களும் பாவம் என்ன பண்ணுவாங்க” என்றாள் வீரவினை. இயற்கைப்பண், “algades (பிள்ளையாரை இயற்கைப்பண் அவ்வாரு தான் செல்லமாக அழைப்பாள்.) ரொம்ப thanks algades . love you பா... இன்னைக்கு கொழுக்கட்டை பண்ணி தரேன் ஓகே யா” என்று மனதிற்குள் சந்தோசத்தை கொண்டாடினாள்.
ஒருபக்கம், செந்தேனின் பெயரை அம்மா கூறும்போது ஒரு பதட்டம், மறுபக்கம் செந்தேனைத் தாயார் இவ்வளவு அழகாகப் புரிந்து வைத்து உள்ளார்களா என்ற வியப்பு.
அம்மாவிடம் எவ்வாறு அது செந்தேன் அன்று தேசியக்கொடி என்று கூறுவது என்று இவளுக்குத் தெரியவில்லை. சூழ்நிலைக் கைதியாக நின்றாள். கூறித்தான் ஆக வேண்டும் என்று கூற விழைந்த பொழுது அவளுக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. கல்லூரியில் படிக்கும் பொழுது, இயற்கைப்பண் part-time data entry வேலை செய்து கொண்டு இருந்தாள். அவளுடன் கல்லூரியில் படித்த மூத்த வகுப்புச் சகோதரர் சுபின் சுதிர் தான் அதற்கு முதலாளி. அது கணினி தொடர்பான பணி என்பதால் ஒரு தொலைப்பேசியும் ஒரு கணினியும், வேலைக்குச் சேர்வோர்க்கு கொடுப்பார்கள். அவ்வாறு கொடுத்த தொலைப்பேசியை இயற்கைப்பண் தொலைத்துவிட்டாள்.
எவ்வாறு என்றால்... ஒருநாள் இயற்கைப்பண் பயின்ற கல்லூரியில், ஒரு கலைவிழா நடைபெற இருந்தது. அதைப் பார்த்து ரசிக்க மிகவும் ஆர்வத்துடன் இருந்தாள் இயற்கைப்பண். அவளுக்குக் கலை நிகழ்ச்சிகளை ரசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அவ்வளவு ஆர்வம் எதனால் விருக்ஷம் ஆனது என்றால், வீட்டில் ஒரு காதல் பாட்டை சத்தமாக பாடுவதற்ககோ, கேட்பதற்கோ கூட பயமாகவும், கூச்சமாகவும் இருக்கும். பாட்டு கேட்கவேண்டும் என்றால், பெரும்பாலும் earphones இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவ்வாறு இருக்கையில், இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் ஆர்வத்தைக் கூட்டத்தானே செய்யும்!
ஆர்வத்துடன் இயற்கைப்பண்ணும் அவளின் தோழி பயிந்தமிழும் சொகுசு பேருந்தில் கல்லூரிக்கு சென்றனர். Phone னை, செம்மறி ஆட்டின் தோலில் கருப்பு paint அடித்தது போல வடிவமைக்கப் பட்டு இருந்த ஒரு purse ல் வைத்து மடியில் வைத்து இருந்தாள் “ticket ticket, எங்க மா எங்க போறிங்க?” என்ற நடத்துனரின் ஓசையைக் கேட்டவுடன் முதுகிலிருந்த புத்தகப் பையை மடியில் வைத்துக்கொண்டு சில்லறையுடன் சேர்த்து காசை எடுத்துக்கொண்டு இருந்தாள். சன்னல் ஓர காற்றை ரசித்தவாறே பயிந்தமிழ் ஏதோ ஒரு நிகழ்வை விளக்கிக்கொண்டு இருந்தாள். அதில் நேரம் சென்றதே தெரியவில்லை. “பாரதியார் main gate லாம் ready ஆய்க்கோ” என்று நடத்துனர் கூறியவுடன், “ஐயோ வந்துருச்சு டி” என்று சிரித்துக்கொண்டு இருவரும் மடியிலிருந்த புத்தகப்பையை தோளில் மாட்டியவாறு இறங்கினர். கலைவிழா நடக்கும் அரங்கிற்குச் சென்று நல்ல இடமாய் பார்த்து settle ஆனவுடன், “Selfie எடுக்கலாம் டி” என்று பயிந்தமிழ் கூற, இயற்கைப்பண் அவளது தொலைப்பேசியை எடுக்கப் புத்தகப்பைக்குள் கையை விட்டாள். அதில் தொலைப்பேசி இல்லை. எங்கே அது, வீட்டிலேயே வைத்து விட்டோமோ என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் தான், அந்த முள்ளம்பன்றி purse சை, மடியில் வைத்து இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. உடனே, என்ன செய்யலாம் என்று சற்று யோசித்தாள். “சரி டி நம்ம bus stop க்கு போலாம். Bus மருதமலைக்கு போயிட்டு டக்குனு return வந்துரும். அப்படி வரும்போது அதுல ஏறி conductor கிட்ட கேட்டு பாக்கலாம்” என்றாள் இயற்கைப்பண். “ஆ... ok டி வா போலாம். பதட்டப்படாத, கெடச்சுரும்” என்று பயந்தமிழ் கொஞ்சம் ஆறுதல் அளித்தாள். பத்து நிமிடங்களுக்கு மேல் நின்றும் அந்த எழுபதாம் எண் பேருந்து வரவே இல்லை. “ஏ இயற்க்கை, bus போயிருச்சோ என்னமோ டி இன்னு வரலையே”. “எனக்கு பயமா இருக்கு டி தமிழ். சுபின் சுதிர் அண்ணா கிட்ட நான் என்ன சொல்லுவேன்” என்று அழுகாத குறையாக கையை பிசைந்து கொண்டு நின்றாள். “Hey எனக்கு ஒரு idea டி. சுபின் சுதிர் அண்ணாக்கு phone பண்ணி இதை சொல்லீட்டு நம்ம பேசாம மருதமலை போய் பாக்கலாம்” என்றாள். அந்த யோசனை சரி என பட்டது. அவரிடம் இதைக் கூற, “என்ன அம்மாடி அப்படியா, சேரி பதறாதிங்க, நா வண்டியில் வரேன்” என்றார். அவரின் தலைமையில் உள்ள குழு தான் அந்த நிகழ்ச்சிக்கு volunteers வேறு. நாம் அனைவரையும் தொந்தரவு செய்கிறோம் என்று இயற்கைப்பண் மனம் வருந்தினாள். மருதமலைக்கு சென்று அந்த பேருந்தில் தேடியும் phone கிடைக்கவில்லை. நடத்துனர்களுக்கும் தெரியவில்லை என்றே கூறினர்.
கலங்கிய மனத்தோடு என்ன கூறுவது என்று தெரியாமல் என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா என்றாள். “சரி மா விடுங்க, இது எல்லாம் நடக்கிறது தான். part time க்கு வேற ஏதாச்சோ பார்க்கலாம். தொலைச்சுட்டேனு அம்மா கிட்ட சொல்லாதிங்க அம்மா வறுத்த படுவாங்க. நான் தான் phone அ return வாங்கீட்டேனு சொல்லீருங்க அம்மாடி” என்றார். இயற்கைப்பண்ணிற்கு மனது மேலும் மேலும் பாரம் ஆனது. “இல்ல அண்ணா நான் உண்மையையே சொல்றேன்” என்றாள். “வேண்டாம் மா நா சொன்ன படியே சொல்லுங்க” என்று இயற்கைப்பண்ணின் மனத்தை ஒப்புக்கொள்ள வைத்தார் சுபின்சுதிர்.
Part time சேர்வதற்கு முன்னர் இயற்கைப்பண்ணிடம் smart phone இல்லை. பழைய Nokia தான் உபயோகித்துக் கொண்டிருந்தாள்.. அவ்வாறு பொக்கிஷமாகக் கிடைத்த ஒன்றை தொலைத்து விட்டதை நினைத்து நினைத்து அவள் மீதே அவளுக்கு கோபம் தாங்கவில்லை. பல வாரங்கள் கழித்தே அந்த நிகழ்வைப் பற்றி சிந்திக்கும் வீரியம் குறைந்தது.
ஒரு நாள் இயற்கைப்பண்ணும் வீரவினையும் பேசிக்கொண்டு இருக்கையில், பேச்சு வழக்கில் தொலைப்பேசியை அவள் தான் தொலைத்தால் என்ற உண்மையை ஒளிர விட்டாள் . அதற்கு வீரவினை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, நம்பிக்கை துரோகம் செய்தது போல் வலிக்கின்றது நீ சொன்ன பொய் என்றார். அதுபோல தற்பொழுது காசை செந்தேனிற்கு அல்ல தேசியக்கொடிக்குத்தான் குடித்தேன் என்ற உண்மையைக் கூறினால், திரும்ப என்ன நடக்குமோ என்ற அச்சம் மனத்தில் வியாபித்து இருந்தது. அனைத்தும் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று பிள்ளையாரிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு மன சஞ்ஜலத்தை சற்று குறைத்தாள்.
Comments
👏
ReplyDeleteநன்றி 😇
Delete