- Get link
- X
- Other Apps
காட்சி 2
அந்த நாளின் காலை மட்டும் மதிய வேளை நன்றாகச் சென்றது. மணி இரவு 7.15; விறுவிறுப்பான வருத்தப்படாத குட்டி கரடி சங்கத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டே, இடையில் வந்த விளம்பர இடைவேளையில் தனது தொலைபேசியின் internet-டை on செய்தாள் இயற்கைப்பண். அப்பொழுது தேசியக்கொடியிடம் இருந்து "அந்த photo இருக்கானு confirm அ தெரியல மா, நான் பாத்துட்டு சொல்றேன்" என்ற whatsapp message வந்தது. பின்னர், “சரி கொடி, நீ பாத்துட்டு சொல்லு, அப்புறம் என்ன பண்ணீட்டு இருக்க, நான் இப்போ வேலை தான் தேடீட்டு இருக்கேன்” என்று reply அனுப்பினாள் இயற்கைப்பண். அதற்கு தேசியக்கொடியோ "நானும் தான் மா, வேலை தான் தேடீட்டு இருக்கேன். இன்னைக்கு exam fees கட்ர கடைசி நாள் மா. காசு பத்தல, காலையில இருந்து எல்லார்கிட்டயும் கேட்டுட்டு இருக்கேன், ஆனா எங்கயும் கிடைக்கல. இன்னு 4500 வேணு மா என்ன பண்றதுனே தெரில" என்றான்.
அதை வாசித்தவுடன், இயற்கைப்பண்ணிற்கு உயிர் துடித்தது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழி உண்மைபோல் தோன்றியது. ஏன் என்றால், கொடி ஒரு வகுப்புத்தோழன் மட்டும் அல்ல, அதையும் தாண்டி உண்மையான உயிர்த் தோழன். பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி பருவத்திலும் சரி மிகவும் இக்கட்டான நேரங்களில் உறுதுணையாக நின்று பெரும் உதவிகளைச் செய்து உள்ளான். ஆபத்தில் உதவுவனே உண்மையான நண்பன் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளான். குறிப்பாக, இரண்டு மூன்று விஷயங்கள் இயற்கைப்பண்ணின் நினைவுக்கு வந்தது.
ஒன்று, இயற்கைப்பண் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த பொழுது, ஒருதலைக் காதல் தொல்லை கொடுத்த ஒரு இளைஞனிற்கு உண்மை யாதென்று புரிய வைக்க எடுத்த முயற்சியில், தேசியக்கொடி ஆற்றிய பங்கு.
இரண்டு, கல்லூரி பருவத்தில் மனது அளவில் இயற்கைப்பண் மிகவும் நொறுங்கிக் கிடந்த சமயத்தில், வேறு எந்த தோழியோ, தோழனோ கூறாத ஆறுதலும், தைரிய வார்த்தைகளும் அதன் பிறகு, இயற்கைப்பண் அந்த மன உளைச்சலில் இருந்து வெளிவந்ததும்.
மூன்று, semester-க்கான கட்டணம் கட்டவிருக்கும் பொழுது நிகழ்ந்த காசு பற்றாக்குறையைத் தீர்க்க தக்க சமயத்தில் உதவியது.
நான்கு, 12th arts வகுப்பறையில் இயற்கைப்பண் பெண்கள் வரிசையில் முதல் bench யில் அமர்நதிருப்பாள். தேசியக்கொடி ஆண்கள் வரிசையில் கடைசி bench யில் அமர்ந்திருப்பான். ஒருமுறை interval சமயத்தில் waranda வில் எதிர் எதிரே பார்த்துக்கொண்ட பொழுது, “இயற்கைப்பண் எனக்கு ஒரு இருபது ரூபாய் வேணும் மா, கொஞ்சம் அந்த blackboard பக்கத்துல இருக்க shelf ல chalkpiece box உள்ள வெச்சுற்றியா? நான் எடுத்துக்கிறேன்” என்று நேரடியாக எந்தவித கூச்சமும் இன்றி உரிமையுடன் கேட்டான். “Ok கொடி, நான் வெச்சுற்றேன்” என்று சிரித்தபடி எதார்த்தமாக கூறிவிட்டு class அய் நோக்கி சென்று கொண்டு இருக்கயில், "Hey இயற்கைப்பண் உன்ன உமா miss கூப்புடுறாங்க பா" என்று ஆதித்யன் எப்பொழுதும் உள்ள பதட்டத்துடன் கூற, சிரித்துக்கொண்டே “Ok ஆதி, நான் போறேன், நீ பதட்டப்படாம பாத்து போ, அப்டியே எனக்கும் சேர்த்து ஒரு bread பஜ்ஜி வாங்கீட்டு வா” என்று கூறிவிட்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள். பையில் இருந்து இருபது ரூபாயை எடுத்து... chalkpiece box அய் நோக்கி சென்ற பொழுது... அங்கு அந்த box ஏ இல்லாமல் இருந்ததும், ஷோ என்று மனத்திற்குள் சிரித்துக்கொண்டு தனது வணிகவியல் பாடப்புத்தகத்தில் பக்க எண் 77 இல் வைத்ததும், கொடியிடம் “Commerce book - seventy seven கொடி” என்று கூறியதும் வசந்தங்களாய் நினைவுக்கு வந்தன. இதுபோல ஐந்து, ஆறு, ஏழு, என அடுக்கிக்கொண்டே போக வசதியாய் பல சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனதிற்குள் காட்சியாக ஓடின.
கண்டிப்பாக உதவ வேண்டும், கண்டிப்பாக உதவ வேண்டும் என்ற எண்ணம் மனத்தை வருடியது. சரி கொடி, நான் என் நண்பர்களிடம் கேட்கின்றேன் என்று கூறிவிட்டு, தனது தோழிகளிடமும், தோழர்களிடமும் கேட்கத் தொடங்கினாள்.
Comments
Post a Comment