- Get link
- X
- Other Apps
காட்சி 1
இயற்கைப்பண் ஆர்வமாக ஏதோ ஒன்றை மடிக்கணினியில் இயக்கிக்கொண்டு இருந்தாள். வீரவினை காய்கறிகளை அறிந்தவாறு… இயற்கைப்பண் உனக்கு வயது 21, மணியோ 7.21, காலை வேளையில் வீட்டு வேலை செய்வதை விட்டுவிட்டு என்ன மடிக்கணினியில் நோண்டிக்கொண்டு இருக்கிறாய் என்றாள். “வரேன் மா” என்று மடிக்கணினியை sleep mode-டில் போட்டு விட்டு அடுப்படிக்குச் சென்றாள். அங்கு குளிர்சாதனப் பெட்டிக்கும் சுவருக்கும் இடையில் உள்ள சின்ன சந்தில் கையை விட்டு துடப்பத்தை எடுத்து வீட்டைக் கூட்டியவுடன், மீண்டும் மடிக்கணினியை இயக்கத் துவங்கினாள்.
எதற்காக என்றால், ஓரிரு நாட்களில் அவளின் தோழி குரலமுதுவிற்கு பிறந்ததினம் வருகிறது. குரலமுதுவும் இயற்கைப்பண்ணும் ஒரே பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தனர். பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் தான் மிகுந்து நெருங்கிப் பழகினர். எல்லா துக்கத்திலும், சந்தோசத்திலும் இருவரும் ஒன்றாக இருந்தனர். நல்ல ஒரு பழக்கம், நட்பு, சிநேகம் அளவு கடந்த நம்பிக்கையும் கொண்டு இருந்தனர்.
அவளின் பிறந்தநாள் பரிசாக இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள், குரலமுது மட்டும் இருக்கின்ற புகைப்படங்கள், இருவரும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்ட குரல்பதிவுகள், காணொளிகள், WhatsApp status வைத்த பொழுது எடுத்த screenshot-டுகள் இவை அனைத்தையும் சேகரித்து ஒரு pendrive-வில் போட்டு கொடுத்தால்… குரலமுது அவளின் பிறந்ததினத்தன்று அந்த பழைய தேன் நினைவுகளைப் பார்த்து மகிழ்வாளே என்று யோசித்து, இதுதான் இந்த கொரோனா ஆண்டிற்கான தகுந்த பரிசாக இருக்க முடியும் என்று முடிவு எடுத்தாள்.
இயற்கைப்பண்ணிற்க்கு, இயற்கையாகவே அவளின் புகைப்படம், குரல்பதிவு மற்றும் சிலவற்றை வருடவாரியாக ஒவ்வொரு folder-ரில் சேமித்து வைப்பது வழக்கம். ஒவ்வொரு folder-யிலும் குறைந்தபட்சம் எழுபது, அதிகபட்சம் மூன்றாயிரம் படங்கள் இருக்கும். அவ்வாறு மொத்தமாக இருக்கின்ற படங்களில் இருந்து குரலமுது இருக்கின்ற படங்களை மட்டும் தனியாக ஒரு folder-ரில் வருட வாரியாக சேமித்துக் கொண்டு இருந்தாள்.
அவ்வாறு செய்து கொண்டு இருக்கையில் 2020 ஆம் ஆண்டு folder-ரில் ஒரு அழகிய புகைப்படம் குறைவதை அவள் கவனித்தாள். எல்லாம் இருக்கின்றன, அந்த புகைப்படம் மட்டும் எங்கே என்று யோசித்துக் கொண்டு இருக்கையில் சல சல வன ஒரு சப்தம். மீன் தொட்டியில் உள்ள shark-குகள் தொட்டியை உடைக்கப் போவது போல இடமும் வலமும் சென்று தாங்கள் பசியாக இருப்பதைத் தெரிவித்தன. “அச்சச்சோ இருங்க வரேன்” என்று அதற்கான உணவை அளிக்கும்போது, அந்த தொலைந்து போன புகைப்படத்தைப் பற்றிய ஒரு யோசனை மனத்திற்குள் துளிர்த்தது.
இயற்கைப்பண், ஒருமுறை அந்த தொலைந்து போன புகைப்படத்தை WhatsApp DP யாக வைத்திருந்த பொழுது, அவளும் அவளின் இனிய தோழன் தேசியக்கொடியும், அந்த புகைப்படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. எனவே, தேசியக்கொடியிடம் அந்த புகைப்படம் இருக்க வாய்ப்பு உள்ளது என்று அவனிடம் இதைப்பற்றி WhatsApp யில் கேட்க முனைந்தாள் இயற்கைப்பண். அப்பொழுது மணி காலை 8.15; மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பேசவிருப்பது இதைப்பற்றியே.
Comments
சிறப்பு
ReplyDeleteநன்றி 😇
Deleteநல்ல பதிவு.. இந்த கதையின் முடிவை நன்றாக முடிக்குமாறு கேட்டுகொள்கிறேன்...😊
ReplyDeleteநன்றி 😇
Delete