கவிதைக்காக

கலங்கும் நெஞ்சத்தை  நிச்சயம்  நீ வருவாயென காத்திரு என்பேனா?

இல்லை, இது வெறும் காணல் நீர் கடினமாக இருந்தாலும் கடந்துவிடு என்பேனா?

நேற்று எவனோ ஒருவனாய் இருந்தாய்,

இன்று இருவர் இடையே நடக்கவிருக்கும் எழில்மிக்க காமத்தை கற்பனை செய்ய வைத்தாய்,

இந்த பரிணாமத்தை எவ்வாறு பக்குவமாய் பறைசாற்றினாய்?

நீ எனக்கு தான் என்று உன்னை இஷ்டத்திற்கு சீண்டவா,

இல்லை, நீ என்னவன் இல்லை என்று திறை இட்டு உன்னிடம் சிட்டிகை அளவில் பேசவா?

தூங்கும் முன்னும் எழுந்த பின்னும் நீ பேசிய வார்த்தைகளை பார்த்து ரசிப்பது என் வழக்கம்,

எதிர்காலத்தில் நிகழ்காலத்தை ரசிக்க எனக்கு  அனுமதி இல்லையா?

நம் காதல் செய்கைகளை சொல்லும் அந்த நான்கு பாடல்களை கேட்டுக் கேட்டு உன் நினைவுகளை  எடுப்பேன்,

கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு யுகத்திற்கு உன்னை அழைத்து சென்று அந்த பாடல்களை என் குரலில் கேட்கச் செய்திடுவேன்...


- குருஷியா


Special Thanks to: Gowtham N

Comments

Post a Comment